Friday, June 19, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

Balaji by Balaji
19/06/2026
in மாவட்டங்கள்
0
Thirukkovilur Jamabandi

Thirukkovilur Jamabandi

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.இ.பத்மஜா  தலைமையில் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

AlsoRead

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 1435-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வரும் 29.06.2026 வரை நடைபெறுகிறது. அரசு விடுமுறை நாட்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து ஏனைய நாட்களில், சம்பந்தப்பட்ட வட்டங்களுக்கான வருவாய்த் தீர்வாய அலுவலர்களால் இந்த ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் திருக்கோவிலூர் வட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது.

240 கோரிக்கை மனுக்கள்: இன்றைய நிகழ்வில், திருக்கோவிலூர் குறுவட்டத்திற்குட்பட்ட கரடி, டி.கீரனூர், கீழையூர், திருக்கோவிலூர் (வடக்கு), திருக்கோவிலூர் (தெற்கு), கீழத்தாழனூர், அரும்பாக்கம், வெண்மார், மேலத்தாழனூர், சிவனார்தாங்கல், கனகனந்தல், தனகனந்தல் உள்ளிட்ட 12 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

பட்டா மாற்றம், கணக்கு திருத்தம், வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வாரிசுச் சான்று, ஆக்கிரமிப்பு அகற்றுதல், முதியோர் ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை, பொது விநியோகத் திட்டம் மற்றும் நில ஒப்படை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 240 மனுக்கள் பெறப்பட்டன. இவை அனைத்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.

உடனடித் தீர்வு: பெறப்பட்ட மனுக்களில் 6 நபர்களின் மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, அவர்களுக்கான குடும்ப அட்டை பெயர் மாற்ற ஆணைகளை கலெக்டர் வழங்கினார். மேலும், செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஜெயந்தி என்பவருக்கு ரூ.3,500 மதிப்பிலான காதொலிக் கருவியையும் அவர் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, கிராமக் கணக்குகளும் சரிபார்க்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்த வருவாய்த் தீர்வாய முகாம்களில், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் ஜெ.இ.பத்மஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வின் போது, திருக்கோவிலூர் வட்டாட்சியர் ச.கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Previous Post

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

Related Posts

EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026
Cheyyar River

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

வந்தவாசி அருகே 11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செக்குக் கல்வெட்டு கண்டெடுப்பு!

12/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு
  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved