புதுப்பாளையம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குமாரி, அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்து அசலை திரும்ப பெற்றார். பின்பு சம்பத்தை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வட்டி பணத்தை கேட்டுள்ளார் அப்போது ஆத்திரமடைந்த சம்பத் வாசற்படியில் இருந்த கருங்கல்லை எடுத்து மூதாட்டியின் தலைகள் தாக்கியதால் மூதாட்டி கடந்த 16ம் தேதி இறந்துள்ளார்.
இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் கொலையை மறைக்க சம்பத்து என்பவர் மூதாட்டியின் தலை கழுத்து கை கால் ஆகியவர்களை கை கால் கட்டி சாக்கு பையில் மூட்டையாக கட்டி அருகில் இருந்த விவசாயக் கணத்தில் வீசிவிட்டு சென்றுள்ளார்.
சில தினங்கள் கழித்து மூதாட்டியின் சடலம் கிணற்று நீரில் மிதந்து துர்நாற்றம் வீசுவதை வழியாக சென்ற நபர் கண்டு கிராம மக்களுக்கும் பாச்சல் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற துணை காவல் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான காவல் ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவல்துறை துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் காவல்துறையினருக்கு மேற்கண்ட விவரம் தெரியவந்துள்ளது.
கொலை செய்த சம்பத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.



