வேலூர் சத்துவாச்சாரி காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் பிள்ளையார்குப்பம் பகுதியில் காவல் ஆய்வாளர் விஜய் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட இரண்டு கார்களை மடக்கி சோதனை செய்தபோது ஒவ்வொரு காரிலும் சுமார் 75 வீதம் 150 கிலோ ஹான்ஸ் குட்கா இருப்பது தெரியவந்தது. குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
அவற்றில் வந்த சித்தூர் மாவட்டம் கங்கை பள்ளியைச் சேர்ந்த சாதிக் பாஷா (வயது 33), முகமது அயாஸ் உசேன் (31) ஆகிய இருவர் காரில் கடத்தி வந்தது தெரிய வந்தது . இருவரையும் கைது செய்துநீதிபதி முன் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.



