போளூர் அருகே புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் வெற்றிவேல் (17), திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை கல்லூரிக்கு செல்ல போளூர் பஸ் நிலையத்தில் காத்திருந்த அவர், வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தில் ஏறும்போது, முன்பக்க படிக்கட்டில் கால்தவறி கீழே விழுந்தார்.
இதில் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



