தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், தானிப்பாடி அருகே உள்ள சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து பைப் உடைந்ததால், குடிநீர் ஒரு வாரமாக கழிவு நீர் கால்வாயில் கலந்து வீணாகி வருகிறது.
இதன் காரணமாக, அந்த பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் சரிவர கிடைக்காமல் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
உடைந்த குடிநீர் குழாயை அவசரமாகச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



