கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாக்குறிச்சி முதல் நாகலூர் வரை செல்லும் கோமுகி ஆற்றின் வழிப்பாதையில் 7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது.
இந்த பணியில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து பணியைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசுகையில், புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தால் போக்குவரத்து சீராகி பொதுமக்கள் சிரமம் இன்றி செல்ல உறுதுணையாக இருக்கும். இந்த பாலத்தை இன்னும் ஆறு மாத காலத்தில் கட்டி முடிக்கவேண்டும் வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் புவனேஸ்வரி பெருமாள், தாமோதரன், ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை, நெடுஞ்செழியன், அரசு அதிகாரிகள், ஊராட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.



