திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் உதவி பொறியாளர் சாலை செல்வமணி தலைமை தாங்கினார். மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், நகர தி.மு.க செயலாளர் சௌந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி முருகையன், அவைத்தலைவர் பாண்டுரங்கன், ஆத்மா குழு தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஒப்பந்ததாரர் தவக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் எம்.எல்.ஏ பங்கேற்று நபார்டு திட்டத்தின் மூலம் ரூபாய் 98 லட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் வெ.தங்கதுரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் காளியப்பன், ஒன்றிய துணைச் செயலாளர் தரணி, அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் லோகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் இறுதியாக ஊராட்சி செயலாளர் சசிகலா நன்றி கூறினார்.



