திருவண்ணாமலை எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில், “இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பங்கு” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கு. கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கே.வி. அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் எஸ். பாஸ்கரன் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் என். புருஷோத்தமன் வரவேற்புரையாற்றினார். பிஆர்ஓ சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார்.
இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, “ராம் சாப்ட்வேர் சொலுஷன்ஸ்” நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஆர். ராம் குமார் கலந்து கொண்டு, “இணையவழி சந்தைப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் பங்கு” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
அவரது உரையில், தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு எவ்வாறு இணையவழி சந்தைப்படுத்தலை மாற்றியமைத்து வருகிறது என்பதையும், மாணவர்களுக்கு எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி உருவாகின்றன என்பதையும் தெளிவாக விளக்கினார். திரளான மாணவ, மாணவிணகள் இதில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



