சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறை சார்பில் பி.ஜே.பியின் வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி மாபெரும் கையெழுத்து இயக்கம் சேலம் அம்மாபேட்டை மிலிடெரி ரோடு ரவுண்டானாவில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை தலைவர் சிவகுமார் மாரிமுத்து தலைமை தாங்கினார். பிஜேபியின் வாக்குத் திருட்டை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்.சி துறை மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
எஸ்.சி துறை மாநில துணைத் தலைவரும் சேலம் மண்டல பொறுப்பாளருமான வழக்கறிஞர் மு.தினகரன் முன்னிலை வகித்தார். சேலம் மாநகர காங்கிரஸ் மூத்த தலைவர் வி.தர்மலிங்கம், தமிழ்நாடு சேவாதள மாநில துணைத் தலைவர் வெங்கட்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர் விஜயசேகர், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.ஆர்.சுரேஷ், காங்கிரஸ் கமிட்டி செயலாளர் வசந்தம் சரவணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தனசேகரன், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சீரமைப்பு கமிட்டி பொறுப்பாளர் அல்லிக்குட்டை பூபதி, ராகுல் ஸ்போர்ட்ஸ் தேசிய தலைவர் விஜயலட்சுமணன், ஓபிசி மாநிலத் துணைத் தலைவர் ஏ.டி.சுப்பிரமணி, மாநகர பொதுச்செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



