ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர், கிருஷ்ணன். இவர் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட விவசாயி அணித் தலைவராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் தனது விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாழைப்பந்தல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் மாமா கன்னியப்பன் ஏற்கனவே செய்யாறில் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிச் சடங்குக்கு செல்வதற்காக உறவினர்கள் எல்லாரையும் அழைத்துவிட்டு, கிருஷ்ணன் தனது நிலத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்ச முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



