திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் களத்துமேட்டுத் தெருவில் அமைந்துள்ள வள்ளலார் திருச்சபையில் 349-வது மாத பூச விழா, வள்ளல் பெருமான் பிறந்தநாள் விழா, பேச்சரங்கம், கலை நிகழ்ச்சிகள், பரிசு வழங்குதல் என ஐம்பெருவிழா காலை அகவல் பராயணத்துடன் தொடங்கியது.
அனைவரையும் ஆசிரியை பிரியா வரவேற்றார். சன்மார்க்க சீலர் மான்கு. ஏழுமலை தலைமையில் பேராவூர் கவிஞர் சுபாஷ், சந்திரபோஸ்,செல்வம் சிவப்பிரகாசம், ஏழுமலை, சுப்பிரமணி, குணசேகர் சுபாஷ், கல்யாணி அயிலு, ரங்கசாமி தேவி ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெற்றது. அனைவரையும் வரவேற்பு நடனம் மூலம் கோபிகா, பூஜா, ரிஷிகா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தெருக்கூத்து நாடகம் மழவந்தாங்கல் பள்ளி மாணவ மாணவிகள் நடித்துக் காட்டினார்.
மதியம் 12 மணி அளவில் பேச்சுப் போட்டி ‘அன்பெனும் குழல்புகும் அரசே’ என்ற தலைப்பில் வளர்மதியும், ‘மரணமிலா பெருவாழ்வு’ என்ற தலைப்பில் சு.பச்சையம்மாள் சரவணனும் வள்ளலார் தலைப்பில் யுவஸ்ரீ, பூமிநாதனும் பேசினார்கள். நாடகத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நாடகக் கலைஞர் செல்வம் செல்வி, தட்சிணாமூர்த்தி, சுபாஷ் ஆகியோர் சான்றிதழ் வழங்கினார்கள். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நக்கீரன், சாந்தி, பூபாலன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்.
விழா முடிவில் ஜெயலட்சுமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் திருச்சபைச் செயலாளர் பச்சையம்மாள், சரவணன், மனோன்மணி முருகன் ஆகியோர் செய்து இருந்தனர். காலை, மதியம், இரவு என சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



