திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா அப்பாத்துறை ஊராட்சி மோளாவாளாடி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 24). இவர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் விடுதியில் தங்கி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் வேடசந்தூருக்கு வந்துவிட்டு மீண்டும் நூற்பாலை விடுதியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூர் – திண்டுக்கல் சாலையில் நாகம்பட்டி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது நாகம்பட்டியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (வயது 19) வினோத் பாண்டி வயது (19) ஆகிய இருவரும் இரண்டு சிறுவர்களுடன் வந்து வழிமறித்து கண்ணனை தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த பணம் ஆயிரம் ரூபாயும், விலை உயர்ந்த செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து வேடசந்தூர் போலீசில் கண்ணன் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் வழக்கு பதிவு செய்து மில் தொழிலாளியிடம் வழிப்பறி ஈடுபட்ட நாகம்பட்டியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், வினோத் பாண்டி ஆகியோரை கைது செய்து பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தார்.



