திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், 9 பயனாளிகளுக்கு ரூ.90,000 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் சொ.ஜோ.அருண் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சியாமளா தேவி, மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவர் எம்.எம்.அப்துல்குத்தூஸ் (இறையன்பன் குத்தூஸ்), ஆணைய உறுப்பினர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையினர் நலச்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



