அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கி ஆறாம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களின் “ஒயிட் காஸ்ட் செமி” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக மின் வாரிய செயலாளர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மருத்துவ ஆடையை அளிவித்து, சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசுகையில், மருத்துவ மாணவர்கள் தங்கள் பணியையும், கடமைகளையும் உணர்ந்து நோயாளிகளின் வலியை புரிந்துகொண்டு ஒவ்வொரு மருத்துவ பயனாளரையும் தங்கள் குடும்பத்தார் போல யோசித்து, நேசித்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்றார்.
கல்லூரியின் துணைத் தலைவர் எ.வ.குமரன் முன்னிலை வகித்தார், கல்லூரியின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எ.வ.வே.கம்பன் வாழ்த்துரை வழங்கினார், கல்லூரியின் முதல்வர் டாக்டர் குணசிங் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் கல்லூரியின் சிஇஓ டாக்டர் அசோக்தியாகராஜன், மருத்துவக் கண்காணிப்பாளர்கள் டாக்டர் சிவக்குமார், டாக்டர் செல்வக்குமார், டாக்டர் குப்புராஜ், டாக்டர் பாலசந்தர், டாக்டர் சேஷாத்திரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இறுதியாக கல்லூரியின் துணை முதல்வர் பாக்டர் ஜென்னித் பெர்வின் ராஜி நன்றி கூறினார்.



