திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சிசமங்கலம், அரையாளம் கிராமங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது.
செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி தலைமை தாங்கினார். ஆரணி மத்திய ஒன்றிய பொறுப்பாளர் சு. ராஜ்குமார் வரவேற்று பேசினார்.
அரையாளம் கிராமத்தில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் சிவா தலைமையில் முகாம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் துரைமாமது வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக ஆரணி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளருமான எம். எஸ்.தரணிவேந்தன் கலந்து கொண்டு முகாமில் தீர்வு பெற்றவர்களுக்கு சான்றுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், ஆரணி வட்டாட்சியர் கௌரி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ்.அன்பழகன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணை செயலாளர் ஜெயராணிரவி , நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், எம்.டி.மனோகரன், மோகன், கண்ணமங்கலம் பேரூர் செயலாளர் கோவர்தனன், நகர பொறுப்பாளர் வ.மணிமாறன்,முன்னாள் ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றியகவுன்சிலர் ஏ.எம்.ரஞ்சித், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பழனி, வி.எம்.டி. வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி எம். எஸ்.ரவி மற்றும் திமுக நிர்வாகிகள் மோகனவேலு, மாரியப்பன், பிரியாசுரேஷ், சாந்தகுமார், ஆத்மா பாலமுருகன், முனுகப்பட்டு செல்வகுமார், மேல் சீசமங்கலம் செந்தில்குமார் மற்றும் பலர்கலந்துகொண்டனர்.



