திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அணியமங்கலம் பகுதியில் உள்ள சந்தன வாய்க்கால் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது..
வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம், விருப்பாச்சிபுரம், பூண்டி, லாயம், ஆண்டாள் கோயில் உள்ளிட்ட 10 பத்துக்கு மேற்பட்ட கிராமப் பகுதிகளில் 5000 ஏக்கருக்கும் மேல் இது பாசன வாய்க்காலாக உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக இந்த சந்தன வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்த நிலையில்.. வலங்கைமான் அருகே லாயம் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் பிரபு என்பவர் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் அந்த பாசன வாய்க்காலை தூர்வாரினார்.
குடமுருட்டி ஆற்றின் கிளை வாய்க்காலாக பிரிந்து குடியிருப்பு பகுதி வழியாக வரும் சந்தன வாய்க்காலில் கழிவுநீர் கலக்கப்படுகிறது… மேலும் அருகிலுள்ள மருத்துவ மனையின் கழிவுகளும் கொட்டப்படுவதாக கூறுகின்றனர். மேலும் பாசனத்திற்கு தண்ணீர் வந்தும் பாலிதீன், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பல கழிவுகளால் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் தடை ஏற்பட்டிருந்த நிலையில்.. சந்தன வாய்க்காலை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இரண்டு வருடமாக தூர் வாராமல் இருந்தது.
இந்தநிலையில்.. வலங்கைமான் அருகே உள்ள லாயம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பிரபு என்பவர் தனது சொந்த செலவில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் சந்தன வாய்க்காலை தூர் வாரினார். இதுகுறித்து பிரபு சொல்லும்போது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக சந்தன வாய்க்கால் தூர்வாரப்படாமல் இருந்தது.. அப்பகுதியில் மருத்துவ கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுகள் பாசன வாய்க்காலில் கலந்து வருவதால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் இருந்தது.இந்த நிலையில் எனது சொந்த செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சந்தன வாய்க்காலை இரண்டு வருடங்களாக தூர்வாரி வாரி வருகிறேன்” என்று கூறினார்.



