கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் உறுப்பு வேளாண்மை கல்லூரிகள் 18-ல் 75 காலியிடங்களும், இணைப்பு கல்லூரிகள் 28-ல் 901 காலியிடங்களும் சேர்த்து மொத்தமாக 976 வேளாண்மை இளங்கலை 4 ஆண்டு பட்டப்படிப்பிற்கான காலியிடங்கள் உள்ளன.
மேலும் 2 ஆண்டு வேளாண்மை (டிப்ளமோ) பட்டயப்படிப்பிற்கான காலியிடங்கள் 4 அரசு உறுப்பு கல்வி நிறுவனங்களில் 90 இடங்களும், அரசு இணைப்பு கல்வி நிறுவனங்கள் 3-ல் 19 இடங்களும், இணைப்பு தனியார் நிறுவனங்கள் 8-ல் 323 இடங்களும் சேர்த்து மொத்தம் 432 காலியிடங்கள் உள்ளன.
கடந்த ஆண்டு மற்றும் இவ்வாண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு வேளாண்மை பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளில் சேர்ந்து
பயன் பெறலாம்.
மேலும் இது தொழில்நுட்ப படிப்பு என்பதால் எதிர்காலங்களில் வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைதுறை சார்ந்த அரசு நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் துறையில் உள்ள விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள், பட்டுப்பூச்சி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சர்க்கரை ஆலைகள் போன்ற நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


