திருவண்ணாமலையில் அமைந்துள்ள எஸ்கேபி பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை சார்பில், ‘மாங்க்’ (“MAANG”) மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர் விரிவுரை நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலைவர் கு. கருணாநிதி தலைமை வகித்தார். இணைச் செயலாளர் கே.வி. அரங்கசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி ஆர். சக்தி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் எஸ். பாஸ்கரன் வாழ்த்துரை வழங்கினார்.
கணினி அறிவியல் துறைத் தலைவர் என். புருஷோத்தமன் வரவேற்புரையாற்றினார். பிஆர்ஓ சையத் ஜஹிருத்தீன் கலந்து கொண்டார்
சிறப்பு விருந்தினர்களாக, சைபர்நாட் எட்-டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெயசூர்யா ஞானவேல், இயந்திர கற்றல் பொறியாளர் தர்ஷினி முருகவேல் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
சிறப்பு விருந்தினர் ஜெயசூர்யா ஞானவேல் தனது உரையில், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மெட்டா, அமேசான், ஆப்பிள், நெட்பிலிக்ஸ், கூகிள் (MAANG) ஆகிய நிறுவனங்களில் வேலை பெறுவதற்கான வழிகள், மாணவர்கள் தங்கள் திறன்களை எவ்வாறு மேம்படுத்திக் கொள்ள வேண்டும், மற்றும் செயற்கை நுண்ணறிவுத்துறையில் உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.
மற்றொரு விருந்தினரான தர்ஷினி முருகவேல் இயந்திர கற்றல் துறையில் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், பெண்களுக்கு இத்துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விளக்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பேராசிரியை எஸ். கல்பனா மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர் . திரளான மாணவ, மாணவிகளும், பேராசிரியர்களும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.



