ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கரிவேடு ஊராட்சி கிராம சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் காணப்பட்டதால் ஊர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட கவுன்சிலர் சிவக்குமாரிடம் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி 700 மீட்டர் நீளம் புதிய தார் சாலை அமைப்பதற்கு 15 வது மத்திய நிதிக் குழு மானிய திட்டத்தின் மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை போடும் பணி ஆற்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், திமுக ஒன்றிய செயலாளர் பாண்டுரங்கன், ஒன்றிய பிரதிநிதி சத்யநாதன், ஒப்பந்ததாரர் இளங்கோவன், கூட்டுறவு சங்கத் தலைவர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



