Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

“நெல் மூட்டைகளை சேமித்து வைக்க இடமில்லையா? எடப்பாடி கூறுவது தவறான குற்றச்சாட்டு”

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

admin by admin
25/10/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
“நெல் மூட்டைகளை சேமித்து வைக்க இடமில்லையா? எடப்பாடி கூறுவது தவறான குற்றச்சாட்டு”
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தஞ்சாவூரிலிருந்து சரக்கு ரயிலில் அரவைக்கு அனுப்புவதற்காக நெல் மூட்டைகள் ஏற்றப்படுவதை ஆய்வு செய்த அவா் பின்னா் பேசியதாவது:-

கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் இதுவரை 1,825 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு எடுத்த முயற்சியால் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறுவை சாகுபடிக் காலத்தில் 50 நாள்களில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், 8 லட்சம் டன் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள 1.93 லட்சம் டன் நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணி 10 நாள்களுக்குள் முடிக்கப்படும்.

தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் இன்னும் 2 லட்சம் டன் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கும் அளவுக்கு இட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, புதிதாக கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை வைப்பதற்கு இடமில்லை என எதிா்க்கட்சித் தலைவா் கூறுவது தவறான குற்றச்சாட்டு.

நெல் கொள்முதல் நிலையங்களில் குறைவான அளவிலேயே கொள்முதல் செய்யப்படுவதாக உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டையும் எதிா்க்கட்சித் தலைவா் கூறியுள்ளார். தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குறுவைப் பருவத்தில் 200 நெல் கொள்முதல் நிலையங்கள்தான் திறக்கப்பட்டன. ஆனால், நிகழாண்டு 300 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூா் மாவட்டம் தென்னமநாடு, ஒக்கநாடு கீழையூா் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகளும், ஒரத்தநாடு புதூா், திருவையாறு விளாங்குடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 2 ஆயிரம் நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால், 800 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக எதிா்க்கட்சித் தலைவா் தவறான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளாா். கூடுதலாக நெல் வந்தாலும், அதற்கேற்ப கொள்முதல் செய்ய அரசு வசதி செய்து கொடுத்துள்ளது.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

விவசாயிகள் யாரும் புகாா் மனுக்களை அளிக்காத நிலையில், எதிா்க்கட்சித் தலைவா் மட்டும்தான் பொய்யான புகாா்களைத் தொடா்ந்து கூறி வருகிறாா். நெல்லை எடுத்துச் செல்ல போதிய லாரிகள் இல்லை என்ற புகாரையும் கூறியிருக்கிறாா். ஆனால், 20 ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்ட நிலையத்தில் 16 ஆயிரம் மூட்டைகள் லாரிகள் மூலம் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே, எதிா்க்கட்சித் தலைவா் சொன்ன குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை. பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவா் இந்தப் பொய்ப் புகாா்களை கூறி வருகிறாா்.
இவ்வாறு உதயநிதி கூறினார்.

ஆய்வின்போது அமைச்சா்கள் அர. சக்கரபாணி, கோவி. செழியன், டி.ஆா்.பி. ராஜா மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன்,டிகேஜி நீலமேகம்,மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுக்ம் பூபதி ஆகியோர் உடனிருந்தனா்.

Tags: உதயநிதி ஸ்டாலின்எடப்பாடி கே. பழனிசாமிதஞ்சாவூா் மாவட்டம்
Previous Post

கரிவேடு ஊராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

Next Post

“20 லட்சம் மாணவ மாணவிகளுக்கு விரைவில் மடிக்கணினி வழங்கப்படும்”

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved