விழுப்புரம் சாலாமேடு பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்த ரமேஷ் என்ற நபர், பாணாம்பட்டு பகுதி மக்களிடம் “தீபாவளி பண்டு சீட்டு” எனும் பெயரில் தினத்தண்டல் முறையில் தொகை வசூலித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக சீட்டில் பங்கு பெற்றவர்களுக்கு முறையாக பரிசுப் பொருட்கள் வழங்கியதால், அவர்மீது அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
ஆனால், இந்தாண்டு அதே முறையில் பணம் வசூலித்த பின்னர், தீபாவளி பண்டுகள் வழங்காமல் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். இதனால், அவரிடம் மொத்தம் ரூ.2 லட்சம் வரை இழந்ததாக கூறும் 10-க்கும் மேற்பட்ட பெண்கள், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்து, மோசடி செய்த ரமேஷ் மீது நடவடிக்கை எடுத்து, தங்களது பணத்தை மீட்டுத் தருமாறு கோரினர்.



