கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே விருகாவூர் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார், இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டு கிராமப்புற மக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், “3000 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனை கட்டணம் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது. அனைத்து கிராமங்களிலும் விவசாயிகள்,ஏழை எளிய மக்களுக்கு தரம் உயர்ந்த மருத்துவ பரிசோதனை எளிதில் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், தியாகதுருகம் ஒன்றிய குழு தலைவர் தாமோதரன்,துணைத் தலைவர் நெடுஞ்செழியன், ஒன்றிய திமுக செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ராஜா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



