சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடையாம்பட்டி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமை, சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பயனர்களுக்கு அனைத்து பரிசோதனை முடிவுகள் உள்ளடக்கிய மருத்துவக் கோப்புகளை வழங்கினார். அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி, காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அறிவழகன், மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் திருநாவுக்கரசு, பேரூராட்சி துணைத் தலைவர் குமார், காடையாம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் சாது பக்தசிங் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



