கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குடிநீர் வசதி,சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 410 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 14 மனுக்களும் என மொத்தம் 424 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பி ன் ன ர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 7 மாணவ மாணவியர்களுக்கு தலா ரூபாய். 3150 மதிப்பீட்டில் காதொலி கருவிகளையும், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் 2 பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை ரசீது பெற்ற 18 வயது நிறைவடைந்த பயனாளிகளுக்கு ரூபாய். 2,03,152 மதிப்பீட்டில் முதிர்வுத்தொகைக்கான வழங்கினார்.
இக்கூட்டத்தில் வரை வோலை களும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா,தனித்துணை ஆட்சியர் சுமதி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



