திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல சார்பில் சம்பா நெல் மற்றும் ராபி பருவபயிர்களுக்கு பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு நடப்பு 2025-26 ம் ஆண்டு காரீப்,சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால், ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பினை ஈடு செய்வதற்கும், இயற்கை பேரிடர்களால், பாதிக்கப்பட்ட விவசா யிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், விவசாயிகள் ராபி பருவ பயிரான சம்பா நெல் மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பலன் பெறலாம்.
விழிப்புணர்வு பிரச்சார வாகனமானது பயிர் காப்பீடு குறித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை). மலர்விழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



