திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமையும் இயங்குவதை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகளை உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர் அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திருச்சி மற்றம் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட, ணியை மாவட்ட ஆட்சியர் பா மோகனச்சந்திரன் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டனர்.
அப்போது சுமைதூக்கும் தொழிலாளர்களை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கூறுகையில் ‘கொள்முதல் நிலையங்களில் இரவு 8 மணி வரை விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது குறுவை அறுவடை பணிகள் திருவாரூர் மாவட்டத்தில் 83 சதவிகிதம் முடிவடைந்தவிட்டது.
கடந்த ஆண்டு குறுவை பருவத்தில் 96 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குறுவைப் பயிர் இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது திருவாரூர் மாவட்டத்தில் 1லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் குருவை நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்னும் 10 நாட்களுக்கு அறுவடை பணிகள் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்ஆய்வில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



