கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆராஞ்சி ஊராட்சியில், அரசுப்பள்ளியில் பள்ளிமாணவ-மாணவிகள் அமர்வதற்கான போதிய கட்டிட வசதிகள் இல்லாததால் அதனை சரிசெய்யும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரைத்தலின்படி பொதுத்துறை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதல்படி ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை சார்பில் பள்ளிக்கட்டிடம் (சி.எப். எஸ்.ஐ.டி.எஸ்) திட்டம் 2025-2026ம் ஆண்டிற்கான திட்டத்தின்கீழ் ஆராஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.36 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் கட்ட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஆராஞ்சி ஏ.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சு.அருணாசலம் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வாசுகி ஆறுமுகம், ஒன்றிய உதவிப்பொறியாளர்கள் கே.சிவக்குமார், இரா.ரவிச்சந்திரன், பி.கலையரசி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயா சேகர், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெ.அமுதா, உதவி தலைமை ஆசிரியர் இரா.திலகம் மற்றும் ஆசிரியர்கள் நா.ரேணுகாம்பாள், ஜே.லூர்தமேரி, கோ.பத்மபிரியா, ஆ. ஆலிஸ்பெர்னாண்டோ, மோ.லாவண்யா, ர.வினோத்குமார், ஏ.பிரவீணா ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் உட்பட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.



