சமீபத்தில் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இதன் கதாநாயகன் ரியோ ராஜ், விக்னேஷ்காந்த், இயக்குனர் கலையரசன் தங்கவேல், தயாரிப்பாளர் மணி வீ.ஸ்டார் வினோத் ஆகியோர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து,நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.
அதன் பின்னர் திருவண்ணாமலை சக்தி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படத்தையும் பார்த்தனர். பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆண்பாவம் பொல்லாதது படம் ரொம்பவும் அருமையாக உள்ளது என்று ரசிகர்கள் தெரிவித்தனர். அடுத்து வேலூர், ஓசூர், தர்மபுரி, ஆகிய ஊர்களுக்கு சென்று படம் பார்க்கச் செல்கிறோம்.
இந்த திரைப்படம் மக்கள் மனதில் நல்ல முறையில் இடம் பெற்றிருக்கும் என்று நம்புகிறோம்.
இந்த வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.



