திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்குரிய வீல் சேர்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தாமல் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அள்ளிச் செல்ல பயன்படுத்துகின்றனர்.
இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் தலையிட்டு வில் சேர்களை நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.



