திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கையில் மண்பானை வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நல வாரியத்தில் பதிவு செய்த அத்தனை தொழிலா ளர்கள் குடும்பங்களுக்கும் ரூ. 10,000 வழங்கிட வேண்டும். மண்பாண்டங்களில் உணவு சமைத்து சுவைத்து சாப்பிடும்
நலன்களை பற்றி எதிர்கால சந்ததயர் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு பாடப் புத்தகத்தில் ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்தித் தர வேண்டும்.
பொங்கல் திருநாளில் அரசு சார்பாக இலவச அரிசி, பருப்பு, கரும்பு,சர்க்கரை, வேட்டி, புடவை வழங்குவது போல புதிய நெல் மணிகளை அறுவடை செய்து புதிய பானையில் பொங்கலிட பானையும் புதிய அடுப்பும் வழங்கிட இந்த ஆண்டு முதல் வழங்கிட ஆணையிடவேண்டும் என வலியுறுத்தி, மாவட்டச் செயலாளர் எஸ் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மாநிலத் துணைத் தலைவர் சி. மாதவன், மாவட்ட தலைவர் கே.மணி, மாவட்ட இளைஞரணி ஏழுமலை, மகளிர் அணி சித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.



