Friday, April 24, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி புனரமைப்பு பணிகள்

அமைச்சர் சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தார்

admin by admin
12/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி புனரமைப்பு பணிகள்
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கத்தின் பிரதான கால்வாய்களை ரூ.130 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து மேம்படுத்தும் பணிகளை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் நிலத்தடி நீரினை மேம்படுத்திடும் வகையிலும், விவசாய நிலங்களுக்கு போதிய பாசனவசதிகள் கிடைத்திடும் வகையிலும், வேளாண் விளைநிலங்களின் பரப்புகளை அதிகரித்து கூடுதல் மகசூல் கிடைத்திடும் வகையிலும், அனைத்து ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

துணை முதலமைச்சர் 2024-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் வெள்ளப்பெருக்கை ஆய்வுமேற்கொள்ள கடலூர் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த போது, மழைநீர் வடிவதற்கு ஏதுவாக வடிகால் வசதிகள் மற்றும் ஏரிக்கரைகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் 21.02.2025 அன்று பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியில் 10 புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ரூ.130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி தூர்வாரி புனரமைக்கப்படும் என தெரிவித்தார்.

திட்டக்குடியிலுள்ள வெலிங்டன் ஏரியானது முன்னதாக சிறிய அளவில் பலமுறை தூர்வாரப்பட்டுள்ளது. இருந்த போதிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பணி தொடங்கிவைக் கப்பட்டுள்ளது. இன்றைய தினம் முழுமையாக புனரமைத்து தூர்வாரும் வெலிங்டன் நீர்த்தேக்க கரையின் நெடுகை 1300மீ முதல் 1700மீ வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் புவியியல் ஆய்வுகள் மற்றும் புவி தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, கரையின் கீழ்புறம் அதற்கு இணையாக கரை அமைக்கப்பட உள்ளது. வெலிங்டன் நீர்தேக்கத்தின் பிரதான கால்வாயினை பலப்படுத்தும் வகையில் கால்வாயின் இருபக்கமும் கான்கிரீட் சுவர் கொண்டு புனரமைக்கப்பட உள்ளது.

நீர்தேக்கத்தின் உபரிநீர் வடிகால் கட்டுமானமானது. நீர்தேக்கம் கட்டப்பட்ட காலத்தில் (1913-23) அமைக்கப்பட்டது. இந்த வடிகால் 114மீ அகலத்திற்கு செங்கற்களால் ஆன கட்டுமான ஆகும்.
தற்போது, இந்த வடிகால் கட்டுமானமானது மிகவும் சேதமடைந்து வலுவிழந்துள்ளது. மேலும், உபரிநீர் வடிகாலினை கடந்து சென்று மறுபக்க கரையினை ஆய்வு செய்வதற்கும் மற்றும் வடிகாலினை கடந்து செல்வதற்கும் பாலத்துடன் கூடிய வடிகால் கட்டுமானம் கட்டப்பட உள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதன் மூலம் திட்டக்குடி, விருத்தாசலம் வட்டங்களில் உள்ள 63 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் 24,059 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையான பாசன வசதி கிடைக்கப்பெறும். இவ்வாறு அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் வெங்கடேசன், விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags: அமைச்சர் சி. வெ.கணேசன்கடலூர் மாவட்டம்திட்டக்குடி
Previous Post

முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம்: மாணவர்களின் பெற்றோர்கள் நெஞ்சார்ந்த நன்றி

Next Post

திருவண்ணாமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கண்டித்து

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved