Thursday, April 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவண்ணாமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கண்டித்து

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம்

admin by admin
12/11/2025
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
திருவண்ணாமலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வைக் கண்டித்து
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவண்ணாமலை மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிசார்பில், ஒன்றியபாஜக அரசின் கைப்பாவையாகமாறி எதேச்சதிகார போக்கில், தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டுவந்துள்ளதைக்கண்டித்து 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அண்ணாசிலை அருகில்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன், எம்.பி. தலைமையில் மனிதநேய ஜனநாய கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தினார். திமுக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ். அம்பேத்குமார், ஒ.ஜோதி, மதிமுக இலக்கிய அணி அமைப்பாளர் காரை செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், பறிக்காதே! பறிக்காதே! வாக்குரிமையை பறிக்காதே! நீக்காதே! நீக்காதே! தமிழர்கள் வாக்கை நீக்காதே! செய்யாதே
செய்யாதே! வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யாதே!.
என் வாக்கு! என் உரிமை! திருடாதே! திருடாதே! வாக்கை திருடாதே!
கை வை க் கா தே ! கைவைக்காதே! வாக்கு ரிமையில் கைவைக்காதே! சிதைக்காதே! சிதைக்காதே! மக்களாட்சியை சிதைக்காதே!
பாஜகவே! பாஜகவே! புறவாசலில் நுழையாதே! தேர்தல் ஆணையமே! தேர்தல் ஆணையமே! பாஜகவின் கைத்தடியா நீ? கவனமாயிருப்போம்! கவனமாயிருப்போம்! பாஜகவிடம் கவனமாயி ருப்போம்! என கொளுத்தும் வெயிலிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

AlsoRead

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மணிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி கண்டன உரை நிகழ்த்தி பேசியதா வது:-
பாரதீய ஜனதா கட்சி தொடர்ச்சியாக மூன்று முறை இந்திய ஒன்றியத்தின் தலைமை பொறுப்பிலிருந்து கொண்டு இந்தியாவின் தனித் தன்மை வாய்ந்த
சுதந்திர அரசியல் தன்மை அனைத்தையும் கபளீகரம் செய்து வருகிறது. மத்திய புலனாய்வுத்துறை பாரதீய ஜனதா கட்சியின் கிளை அமைப்பாக உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் கொல்லைப்புற வெற்றி. நாடாளுமன்ற தேர்தலில் மாலை 5 மணி வரை சரியாக நடந்த தேர்தல், 5 மணிக்குமேல் அனைத்து நிலைகளும் மாற்றப்பட்டன. ஆனால் அதை இது வரை எந்த தேர்தல் ஆணையமும் தெளிவுபடுத்த வில்லை. வந்தாரை வாழவைக்கும் தமிழகம், வடநாட்டில் இருந்து வருபவர்களை தாக்குவதாக ஒரு பிரதமரே வாக்குக்காக பொய்பிரச்சாரம் செய்வது இந்த நாட்டில்தான் நடைபெறுகிறது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கடந்த மூன்று ஆண்டுகளாக, கர்நாடகாவில் நடந்த தில்லுமுல்லு, அதன் பிறகு மகாராஷ்டிராவில் நடந்த தில்லுமுல்லு, முன்றாவதாக பீகாரில் நடந்த வாக்கு திருட்டு தில்லு முல்லு, நான்காவதாக அரியானாவில் நடந்த தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்தார். பாஜக விற்கு எங்கு வாக்காளர்களை நீக்க வேண்டும் எங்கு சேர்க்க வேண்டும் என்ற ராஜதந்திரம் தெரியும். இந்த தில்லுமுல்லுகளை தொடர்ந்து செய்து வருகிறது. வாக்காளர் படிவம் தருவதில்கூட தற்போது கட்டுப்பாடுகள் விதித்துள்ளார்கள்.

இந்த பணியினை தேர்தல் ஆணையம் ஒரு வருடத்திற்கு முன்பாக அல்லது ஆறு மாதத்திற்கு முன்பாக தொடங்கி இருக்க வேண்டும். தற்போது தேர்தல் ஆணையம் நெருக்கடி கொடுத்து வருகிறது. பீகாரில் பலபேர் இறந்து போனதாக வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்கள், தற்போது உயிரோடு உள்ளார்கள். அவர்களோடு ராகுல் காந்தி தேநீர் அருந்தி, தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகளை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இவ்வாறு அவர் உரையாற்றினார். தில்லு முல்லுகளை வெளிக்கொண்டுவந்தார். இதைப் போன்ற எண்ணற்ற
ஆர்ப்பாட்டாத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Tags: கண்டன ஆர்ப்பாட்டம்திருவண்ணாமலை
Previous Post

ரூ. 130 கோடி மதிப்பீட்டில் வெலிங்டன் ஏரி புனரமைப்பு பணிகள்

Next Post

அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக மட்டுமல்ல, உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது

Related Posts

Trump Netanyahu Conflict

ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!

07/04/2026
Pichandi, TN Elections 2026

கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்

06/04/2026

பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!

06/04/2026

தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!

06/04/2026

தந்தைக்காக வழிவிட்ட மகன்: ராணிப்பேட்டை தொகுதியில் போட்டியிடப்போவதில்லை என வினோத் காந்தி அறிவிப்பு!

06/04/2026

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 234 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்

05/04/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • ஈரானை அழிக்க அமெரிக்கா மிரட்டல்: “உயிரையும் தருவோம்” – அதிபர் மசூத் பெசஷ்கியான் ஆவேசம்!
  • கீழ்பென்னாத்தூர்: தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வேட்புமனு தாக்கல்
  • பாஜக தலைவர்களே பதில் சொல்வார்களா? – நிதி ஒதுக்கீடு முதல் FCRA வரை முதல்வர் ஸ்டாலின் சரமாரி கேள்வி!
  • தமிழக தேர்தல் 2026: எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று வேட்புமனு தாக்கல்!
  • பேட்டரி துறையில் புரட்சி: கண்ணிமைக்கும் நேரத்தில் சார்ஜ் ஆகும் ‘குவாண்டம் பேட்டரி’!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved