கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வடக்கு மேலூர் அருகே உள்ள விஸ்வா நகரில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டின் போர்டிகோவில் கஞ்சா வாங்கி வந்து வைத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக சிறிய பாலிதீன் கவர்களில் பேக்கிங் செய்து கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நெய்வேலி நகர் காவல் நிலைய ஆய்வாளர் வீரமணி, உதவி ஆய்வாளர் மாதேஸ்வரன், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற வர்களை வளைத்துப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் இந்திரா நகர் மாற்று குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஷாக் என்ற சஞ்சய் (வயது 23), ரவிக்குமார் (23), அன்பு என்ற அன்புமணி (21), ரஜிந்தர் (21) என்று தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த ஒரு கிலோ 150 கிராம் எடையுள்ள கஞ்சா, வீச்சரிவாள், கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



