செய்யாறு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க., ஒன்றியசெயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாட்டில், அழிஞ்சல்பட்டு, செல்லப்பெரும்புலிமேடு, மாங்கால் கூட்ரோடு மாத்தூர் உள்ளிட்ட 10 கிராமங்களில்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகள் (எஸ்.ஐ.ஆர் ) நடந்துவருகின்றன.இதுபற்றி, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்காத வாக்காளர்களை நேரில் சென்று அவர்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்க, தி.மு.க. நிர்வாகிகள் உதவ வேண்டும் என, அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் பொறுப்பு குழு உறுப்பினர்களான தெய்வமணி ஞானமுருகன். லோகநாதன், கிளைக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், பாபு பாய், தினேஷ், பூபதி, சசி, தஸ்லீம், தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



