Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கும் திட்டம்

புதின் முன்னிலையில் மோடி அறிவிப்பு

admin by admin
06/12/2025
in இந்தியா, செய்திகள்
0
ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கும் திட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

ரஷ்ய சுற்றுலாபயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார்.

டெல்லியில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இருநாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிறகு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது என் நண்பர் புதின் எனக்கூறி பேட்டியை தொடங்கிய பிரதமர் மோடி, இந்தியா -ரஷ்யா உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: இந்தியா, ரஷ்யா இரு நாட்டு உறவு பலமானது இந்த நட்புறவுக்கு 25 ஆண்டுக்கு முன்பே, அதிபர் புதின் நமக்கு உதவியாக இருந்தார்.

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பல மாற்றங்களுக்கு மத்தியிலும் இந்தியா-ரஷ்யா உறவு உறுதியாக உள்ளது. இந்தியா-ரஷ்யா ஏற்றுமதி வர்த்தகத்தில் புதிய கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளுக்கு இடையே எரிசக்தி துறை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
உலகில் அமைதிக்காக ரஷ்யாவுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கும். உலகில் பயங்கரவாத ஒழிப்பில் முழு கவனத்துடன் செய ல் ப டு வோம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் நீண்டகாலமாக தோளோடு தோள் ஒன்றாக நின்று போராடி வருகின்றன. நமது இருதரப்பு உறவுகள் பல வரலாற்று மைல்கற்களைக் கடந்து செல்லும் நேரத்தில், ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியா-ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ரஷ்யா பொருளாதார நாங்கள் விவாதித்தோம். 2030ம் ஆண்டு வரை இந்தியா-ஒத்துழைப்புத் திட்டத்துக்கு நாங்கள்ஒப்புக்கொண்டோம் உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் நிரந்தர தீர்வு காண மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். உக்ரைன் பிரச்னையில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே அமைதியை ஆதரித்து வருகிறது.

AlsoRead

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

உக்ரைனில் அமைதியை ஏற்படுத்த இந்தியா எப்போதும் தனது பங்களிப்பை வழங்கதயாராக உள்ளது. எதிர்காலத்திலும் இந்த நிலைப்பாடு தொடரும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
டெல்லியில் ரஷ்ய அதிபர் புதின் அளித்த பேட்டி: இந்தியாவுக்கு எண்ணெய், எரிவாயு, நிலக்கரி வழங்கும் நம்பிக்கைக்கு உரிய நாடு ரஷ்யா. இந்தியாவும், ரஷ்யாவும் சுதந்திரமான நாடுகள். கூடங்குளம் அணு மின் நிலையம் மூலம் மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்கிறது. இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் நவீன வசதிகளை பெற ரஷ்யா உதவி செய்து வருகிறது.

இந்தியா ரஷ்யா இடையிலான இருதரப்பு விஷயங்கள் முழு அளவில் விவாதிக்கப்பட்டது. அணுமின் உற்பத்திக்கான கூடங்குளம் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துகிறோம். இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்குவதை ரஷ்யா தொடரும்.

கடந்த ஆண்டு ரூ.6.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இந்தியா-ரஷ்யா இடையே வர்த்தகம் நடந்துள்ளது. பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்,இந்தியா -ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது. வர்த்தக ஒப்பந்தம் இந்த ஆண்டும் ஈர்க்கக்கூடிய அளவில் இருக்கும் என்று கணித்துள்ளோம்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ரஷ்யா தனது ஆதரவை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. இவ்வாறு ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
குடியரசுத் தலைவர் மாளிகையில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை புதின் ஏற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
23-வது இந்திய-ரஷிய உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நேற்றுமுன்தினம் மாலை இந்தியா வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் புதினை நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி, தனது இல்லத்தில் அவருக்கு இரவு விருந்தளித்தார்.

Tags: இந்தியா ரஷ்யாஇலவச இ-விசா வழங்கும் திட்டம்
Previous Post

மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது

Next Post

ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

Related Posts

Tamil Nadu Rajya Sabha Members

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

05/03/2026
Iran Navy

ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!

05/03/2026

ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி

05/03/2026

மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்

05/03/2026

“எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

05/03/2026

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. தர்மாதிகாரி நியமனம்

05/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!
  • ஈரான் கடற்பகுதியில் அமெரிக்கா, இஸ்ரேல் கப்பல்களுக்குத் தடை: ராணுவம் அதிரடி உத்தரவு!
  • ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலை: மௌனம் கலைத்து இந்தியா இரங்கல் -வெளியுறவுச் செயலாளர் நேரில் அஞ்சலி
  • மாநிலங்களவை தேர்தல் அதிரடி: அன்புமணியை எதிர்த்து ராமதாஸின் உதவியாளர் மனுத்தாக்கல்
  • “எளிய தொண்டரை எம்.பி.யாக்கும் காங்கிரஸ்!” -கிறிஸ்டோபர் திலக் குறித்து செல்வப்பெருந்தகை பெருமிதம்

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved