Thursday, July 23, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது

உதயநிதி ஸ்டாலின் பளிச் பேட்டி

admin by admin
06/12/2025
in செய்திகள், தமிழ்நாடு
0
மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தமிழகம் திராவிட மண் தமிழ் மண்அப்படிப்பட்ட இந்தமண்ணில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அரசும் இடம்கொடுக்காது என உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு கலைஞர் சிலையை திறந்து வைத்தார் அதனை தொடர்ந்து இரவு திருவண்ணாமலைக்கு வருகை தந்தவர் நேற்று காலை திருக்கோவிலூர் சாலையில் எடப்பாளையம் ஏரியில் 33 ஏக்கர் பரப்பளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் பூங்காவை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:
இளைஞர்கள் கூடுதல் பொறுப்பை எதிர்பார்க்கிறார்கள் என்பதால் தாய் கழகத்திற்கு இணையாக பொறுப்புகள் வழங்கப்படஉள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் இளைஞர்கள் 1300 பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் இந்த பொறுப்புக்கள் நியமிக்கப்பட்டால் ஐந்து லட்சம் நிர்வாகிகள் வருவார்கள். இந்தியாவிலேயே எந்த அணிக்கும் இயக்கத்திற்கும் இல்லாத அளவிற்கு திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருப்பார்கள்.

AlsoRead

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

வடக்கு மண்டலத்தில் 91 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள இளைஞரணி நிர்வாகிகளை சந்திக்க உள்ளோம். சுமார் 1,30,000 மேற்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் இருப்பார்கள்.
இளைஞரணி நிர்வாகிகளை வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயார்படுத்தப்பட்டு அரசியல்படுத்தப்பட உள்ளனர்.

இளைஞர் அணி மண்டல சந்திப்பு முதல் முறையாக திருவண்ணாமலையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவர் வடக்கு மண்டல இளைஞரணி சந்திப்பு குறித்த தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பான வெற்றியை கொடுத்தது. தற்போது நடைபெற இருக்கின்ற வடக்கு | மண்டல இளைஞரணி மாநாடு 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடி தரும்.

திருப்பரங்குன்றம் விவகாரம் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. திமுக தலைவர் ஏற்கனவே கூறியிருக்கிறார் தமிழகத்தில் மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது. தமிழகம் திராவிட மண் தமிழ் மண் அப்படிப்பட்ட இந்த மண்ணில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அரசும் இடம் கொடுக்காது. தமிழக மக்களும் அதனை விரும்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags: அமைச்சர் எ.வ.வேலுதமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்திருப்பரங்குன்றம்திருவண்ணாமலைமு.க.ஸ்டாலின் பூங்கா
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம்; நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங். எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு

Next Post

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கும் திட்டம்

Related Posts

Anitha Radhakrishnan Arrest

“ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

03/07/2026
Electric Vehicle Safety

‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!

03/07/2026

40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!

03/07/2026

மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?

03/07/2026

“மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

03/07/2026

“திமுகவை விட்டு விலக போலீஸார் கட்டாயப்படுத்தினர்” – கைதான அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

03/07/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஆணவம் அழிவிற்கு வழி!” – அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
  • ‘மின் வாகன பேட்டரிகளை முடக்கும் ஆபத்து’ – 7 செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!
  • 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு – சென்னை முதல் நெல்லை வரை பரபரப்பு!
  • மக்களே உஷார்! ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய விதிகள், கட்டண உயர்வுகள்! என்னென்ன தெரியுமா?
  • “மரணத்தைவிட கொடியது புறக்கணிப்பு” – எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி அதிமுகவிலிருந்து விலகினார் வைகைச்செல்வன்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved