Friday, June 19, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருப்பரங்குன்றம் விவகாரம்; நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங். எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு

டி.ஆர்.பாலு, மத்திய மந்திரி எல்.முருகன் காரசார வாதம்

admin by admin
06/12/2025
in இந்தியா, செய்திகள்
0
திருப்பரங்குன்றம் விவகாரம்; நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங். எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்அமளியில்ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக் கோரி திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இதன்படி திமுகவின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கி இருந்தனர்.

இந்த சூழலில் நேற்று அவை தொடங்கியதும், திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த நிலையில், சபாநாயகர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கடும் அமளி ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதேபோல திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒத்திவைப்பு நோட்டீசை ஏற்க முடியாது என மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
மக்களவையில் பேசிய திமுக எம்.பி.டி.ஆர். பாலு, “நூறாண்டுகளுக்கு மேலாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபமேற்றப்பட்டது. 1996, 2017 நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி பாரம்பரிய இடைத்திலேயே தீபம் ஏற்றப்பட்டது.

AlsoRead

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

தமிழ்நாட்டில் அமைதியை குலைக்க மதவாத சக்திகள் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். நீதிபதி அவர்களுக்கு சாதமாக தீர்ப்பை வழங்கியிருக்கிறார்” என்று கூறினார்.
டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய மத்திய இணை மந்திரி எல்.முருகன், “நீதிமன்ற உத்தரவை ஏற்காமல் அராஜகப் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் மதிக்கவில்லை. மக்களின் வழிபாட்டு உரிமையை தமிழ்நாடு அரசு தடுக்கிறது. ஓட்டு வங்கி அரசியலுக்காக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை தாஜா செய்ய இவ்வாறு செய்கிறார்கள்” என்று கூறினார். எல்.முருகனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது இருக்கைக்கு எதிரே சென்று திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

Tags: எம்.பி.க்கள் அமளிதிருப்பரங்குன்றம்நாடாளுமன்றம்
Previous Post

அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன் 14 கி.மீ. கிரிவலம்

Next Post

மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது

Related Posts

EV Velu School Thiruvannamalai

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026
Cheyyar River

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

12/06/2026

“நான் அரசியலுக்கு வரலாமா? தகுதி இருக்கிறதா?” – ரசிகர்களிடம் கருத்து கேட்ட ராகவா லாரன்ஸ்!

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!
  • செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!
  • “அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!
  • திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்
  • டெல்லி இந்தி அகாடமி விருதுகள் அறிவிப்பு: வாஜ்பாய், சாவர்க்கர் பெயர்களில் புதிய விருதுகள்!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved