வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த குருவராஜாபாளையம் ஊராட்சியில் நேற்று முன்தினம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் வரி வசூல் சிறப்பு முகாமில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த சிவகுமார் (46) என்பவர். “எங்கள் பகுதிக்கு கடந்த 4 நாட்களாக குடிநீர் வரவில்லை, முறையான வசதிகள் இல்லை நாங்கள் எதற்கும் வரி செலுத்த வேண்டும்” என மது போதையில் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஊராட்சி செயலாளர் கேசவனை (36) சிவக்குமார் என்பவர் தாக்கியுள்ளார். இதனால் ஊராட்சி செயலாளர் கேசவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



