கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தவாரித் திருவிழாவின்போது பலூன்களில் காற்று நிரப்பும் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில் திருவண்ணாமலை மாவட்டம், வெங்காயவேலூர் இனாம்காரியநஙதால் கிராமத்தை சேர்ந்த கலா உயிரிழந்தார்.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 18 பேருக்கு திருவண்ணாமலை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும். பலத்த காயமடைந்துயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதையடுத்து உயிரிழந்த கலா குடும்பத்தினருக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று பாவுப்பட்டு ஊராட்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்து முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் மூன்று இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார். திமுக மாநில மருத்துவரணி துணைத்தலைவர் எ.வ.வே கம்பன் உடனிருந்து ஆறுதல் தெரிவித்து திருவண்ணாமலை திமுக சார்பில் நிதியுதவி வழங்கினார்.



