தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பாடி ஊராட்சிக்குஉட்பட்டமேல்வலசை மற்றும் கீழ்வலசையில் வசிக்கும் சுமார் 200-குடும்பங்கள்கொண்ட பழங்குடியின கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் தேவைக்கு செல்ல போக்குவரத்து வழிப் பாதை இல்லாமல் பெரும் துயரத்தில் வாழ்ந்து வந்தனர்.
அவர்கள் தினந்தோறும் கரடு முரடான சாலை வழியாக ஆத்திப்பாடி ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடையில் உணவு வினியோக பொருளை வாங்கி கொண்டுதலையில்முட்டைகளை
சுமந்து செல்வார்கள்.
மேலும் அப்பகுதியில் வாழும் மாணவ, மாணவியர் தாங்கள் பள்ளிக்கல்வியை படிக்க வேண்டும் என்றால் ஆத்திப்பாடி ஏகலைவன் உண்டு உறைவிடப் பள்ளிக்கு தான் வரவேண்டும். அவர்கள் வசிப்பிடத்திலிருந்து அம்மாணவர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தினந்தோறும் கரடு முரடான மலைப்பாதையில் நடந்தே பள்ளிக்கு வருவார்கள்.
இதுவே, மழைக்காலம் என்றால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவார்கள். மேலும், மருத்துவமனைக்கு உடல் நிலை சரியில்லை. பாம்பு கடித்தாலோ, கர்ப்பமுற்ற தாய்மார்கள் பரிசோதனை செய்வதற்கோ மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றாலும் இந்த கரடு முரடான 3-கிலோமீட்டார் பாதையை கடந்து தான் தானிப்படி அரசு மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய நிலமையாக இருந்து வந்தது.
அந்தவழியாக இரண்டு சக்கர வண்டியில் மட்டும் செல்ல முடியும். இவ்வளவு துயரத்தில் மலை வாழ் மக்கள்
இருந்து வந்த நிலையினை அறிந்த செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனி, ரவீந்திரநாத் ஆகியோரிடம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என்று கூறியதையடுத்து
மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்த சாலையை உடனடியாக சரி செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதி மலை வாழ்மக்கள் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரிக்கு நன்றி தெரிவித்தனர்.



