வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம்சுக்காம்பட்டி கிராமம் எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நான்தோறும்குப்பைகளை வீடு விடாக சென்று சேகரிக்கும் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள் மொத்தமாக அவரவர்கள் தெருவில் வைத்து விடுவார்கள் இதனை அரசால் வழங்கப்பட்ட பேட்டரி வாகனம் மூலம் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கொண்டு சென்று குப்பைக்கிடங்கில் கொண்டு சென்று வைப்பார்கள்.
இந்த சூழ்நிலையில் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பேட்டரி வாகனம் பழுதடைந்தது. இந்த பழுதை சீரமைக்க ரூ 5 ஆயிரம் தேவைப்படும் என்ற சூழ்நிலையில் வாகனத்தை செலவு செய்ய ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் போதுமான நிதி இல்லாததால் தூய்மைப்பணியாளர்கள் தாங்களே பணம் கொடுத்து
சொந்த செலவில் சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி செயலர் பெரியசாமி கூறினாராம்.
இந்நிலையில் நேற்று வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் குப்பைகளை குப்பைகிடங்குக்கு கொண்டு செல்ல முடியாததால் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் தாங்கள் சேகரித்த குப்பைகளை. அய்யலூரில் இருந்து கடவூர் செல்லும் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மற்றும் தெருக்களில் குப்பைகள் குவியலாக கொட்டப்பட்டதால் பொதுமக்கள் தூய்மை பணியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு பேட்டரி வாகனத்தை பழுது பார்த்து தூய்மை பணியாளர்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



