சத்துணவு அமைப்பாளர்கள், கிராம ஊராட்சிசெலர்கள், வனக்காப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிக்கப்படம் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன. 20 ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்கள் அவை செயல்பட்ட நிலையில் ஆளுநர் உரைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (சனிக்கிழமை) பதிலுரை அளித்து பேசினார்.
பதிலுரையில் முதல்வர் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது, நமது அரசு செய்து கொண்டிருக்கிற திட்டங்களைப் பார்த்து, கேட்டு, அவற்றைத் தங்களுடைய மாநிலங்களிலேயும் செயல்படுத்த பல் வேறு மாநிலங்களிலிருந்து அதிகாரிகள் வந்து தெரிந்து கொண்டு போகிறார்கள். ஏன், நம்முடைய திட்டங்களை மத்திய அரசே அடாப்ட் பண்ணி நாடு முழுக்க செயல்படுத்துகிறார்கள். நம்மை விமர்சிக்கின்ற ஆளுநருக்கு, இவையெல்லாம் மட்டும் தெரியாமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
இங்கே மதச்சண்டை இல்லை. சாதிச்சண்டை இல்லை. கும்பல் வன்முறை இல்லை. தொடர் வன்முறை இல்லை. இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை.
அரசின் சாதனைகளின் வரிசையில் மேலும் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புறேன்.
2 கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே லட்சம் வீடுகள் உருவாகும் நிலையில் மேலும் புதிதாக, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ! லட்சம் வீடுகள் கட்டப்படும்.
‘முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிதாக, ஆயிரத்து 88 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 2,200 கிலோ மீட்டர் கிராமப்புற சாலைகள்மேம்படுத்தப்படும். ஏழை மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களைப் பாதுகாக்கும் ‘சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், ஏற்கனவே 33 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள், விவசாய கணவனால் கைவிடப்பட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற, திருமணமாகாத பெண்கள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வரும் நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் அளித்த விண்ணப்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதலாக 1 லட்சத்து 80 ஆயிரம் நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இதற்கான விழா வரும் 4.2.2026 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் 2008-ல் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கினார். அந்தச் சாதனையின் தொடர்ச்சியாக சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம் ஊராட்சி செயலர்களுக்கான ஓய்வூதியம் ரூ.2 ஆயித்தில் இருந்து ரூ. 3 ஆயிரத்து 400 ஆகவும் பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.1 லட்சத்து 14 ரூ. 2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரத்து 200 ஆகவும், பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
சமையலர்கள், சமையல் அங்கன்வாடி உதவியாளர்கள், உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும்; (மேசையைத் தட்டும் ஒலி) பணி நிறைவின்போது அவர்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,200-ம், மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் வன களப்பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக ரூ.1,100-ம் வழங்கப்படும். மேலும், சிறப்பு ஓய்வூதியம் பெற்று வரும் அங்கன்வாடி உதவியாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட இதர சிறப்பு காலமுறை ஊதியப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களுடைய குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
சிறப்பு ஓய்வூதியம் பெற்றுவரும் மேற்கூறிய பணியாளர்கள் உயிரிழக்க நேரிட்டால் இறந்த பணியாளர்களின் இறுதிச் சடங்குச் செலவினங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்புகள் மூலம் தற்போதுள்ள சிறப்புக் காலமுறை ஊதியப்பணியிடங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களும், இத்தகைய பணியிடங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் பயனடைவார்கள்.
அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கோரிக்கைகளில் ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் விடுமுறை காலமான மே மாதத்தில் ஏற்கனவே அவர்கள் கோரிய ஊதியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
அவர்களுடைய அடுத்த முக்கிய கோரிக்கையான நிரந்தரப் பணி நியமனத்தைப்பொறுத்தவரையில் ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புறேன்.
அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட ஏதுவாக, இதற்கான தேர்வுகளில் பகுதிநேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் அளிக்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
கடந்த தேர்தலின்போது யாரும் கொடுக்காத வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம்.முடிந்தளவுக்கு அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும் இருக்கிறோம்.
உங்களால் நிறைவேற்ற முடியாதென்று சவால் விடப்பட்ட வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றிக் காட்டியிருக்கின்றோம். 2 வ ர் க ள் செய்யவேமாட்டார்கள் என்று சொல்லப்பட்ட வாக்குறுதிகளையெல்லாம் செய்து கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் அனைத்துத் துறைகளும் எப்போது வளரும் என்ற ஏக்கத்தில் இருந்தவர்களுடைய வாட்டத்தைப்போக்குவதற்கு அனைத்துத் துறைகளிலும் சமச்சீரான வளர்ச்சியை அடைந்திருக்கின்றோம்.
பெரிய நகரங்களுக்கு ம ட் டு ம் தான் தொழிற்சாலைகளா? பாலங்களா? சாலைகளா? நூலகங்களா?கல்லூரிகளா? உள்கட்டமைப்பு வசதிகளா? என்று சலிப்புடன் கேட்டதை மாற்றி, அனைத்துப் பகுதிகளுக்கும், அனைத்து மாவட்டங்களுக்கும் அனைத்தையும் கொண்டு சென்றிருக்கிறோம்.
இவை அனைத்திலும் சமூகநீதியை, சமநீதியை நிலைநாட்டியிருக்கின்றோம். இவையனைத்தும் என்னால்தான் ஆனதென்று கர்வம் கொள்பவன் அல்ல நான். மூத்த அமைச்சர்கள், நம்முடைய துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையின் பங்களிப்பு இல்லாமல் இதைச் செயல்படுத்தியிருக்க முடியாது.
ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் வழங்கிய இங்கே இருக்கின்ற இத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாமல் சாதனைகள் இல்லை. அதுமட்டுமல்ல, தலைமைச் செயலாளர் தொடங்கி காவல் துறை உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அதிகாரிகள், அனைத்து நிலைகளிலும் ஊழியர்கள் வரை அனைவரின் பங்களிப்பும் இதில் இருக்கிறது. பணியாற்றக்கூடிய தமிழ்நாட்டி ன் கடைக்கோடி மனிதருக்கும் அனைத்துத் திட்டங்களும் சென்று சேருவதை உறுதி செய்கின்றோம். ‘ஊர் கூடித்தேர் இழுப்பதென்று’ சொல்வார்களே. அதைப்போல அரசின் ஒவ்வொரு அணுவும் மக்களுக்காக இது சாத்தியமாயிற்று. எனக்கு உயிரும் உணர்வுமாக செயல்படுவதால்தான் இருந்து, என்னை இயக்கிக் கொண்டிருப்பது திமுகவின் கோடிக்கணக்கான உடன்பிறப்புகள்தான். எனக்கு மனவலிமை கொடுப்பதும், அனைத்து வகையிலும் தோள் கொடுப்பதும் எங்களோட தோழமைக் கட்சிகள்தான்! ஜனநாயகத்தின் ஒரு பக்கம் ஆளும்கட்சியென்றால் இன்னொரு பக்கம் எதிர்க்கட்சிகள்.
மக்கள் மன்றத்தில் தேவையற்ற பல விமர்சனங்களை வைத்தாலும் இந்தச் சட்டப்பேரவையில் வைத்த எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சில ஆலோசனைகளையும் கனிவான நேரத்தில் கனிவாகவும், கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தும், ஆசிரியராகவே செயல்பட்ட பேரவைத் கொள்கிறேன். தலைவர், துணைத் தலைவர், பேரவைச் செயலாளர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் இந்த ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 17 உறுப்பினர்கள் பேசியிருக்கிறார்கள். 5 உறுப்பினர்கள், 58 திருத்தங்களை
வழங்கியிருக்கின்றார்கள். இந்த அரசுக்கு உதவுகின்ற வகையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் தெரிவித்திருக்கிறார்கள். அதேபோல, சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.
அமைச்சர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அவையனைத்தும் உங் களுடைய ஆலோசனைகளைக் கருத்தில்கொண்டு, அவற்றில் நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு உறுதியாக நிறைவேற்றித் தரும். எனவே, இந்த விளக்கத்தைஏற்றுக்கொண்டு உறுப்பினர்கள் தங்களுடைய திருத்தங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றித் தரவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.



