ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கீரனூர் சார்பதிவாளரான மூர்த்தி(40) பொறுப்பு சார்பதிவாளராக பணிபுரிகிறார்.
கள்ளிமந்தயம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு நடைபெறுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, ரூபா கீதாராணி உள்ளிட்ட 8பேர் கொண்ட குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கள்ளிமந்தயம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றுதிடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த பத்திரப்பதிவு அலுவலர் மூர்த்தி உள்ளிட்ட அனைத்து அலுவலர்கள், பத்திரப்பதிவு எழுத்தர், நிலம் வாங்க, விற்க வந்தவர்கள் அனைவரையும் அலுவலகத்தில் வைத்து பூட்டி விசாரணை நடத்தினார்கள்.
மாலை 6 மணிக்கு மேல் ஏன் பதிவு செய்ய நடவடிக்கைஎடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரித்த போது அலுவலக சர்வர் இணையதளம் அது சரியான பின்பு மாலை 6 மணிக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்தால் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அலுவலர்கள் கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகதில் சோதனை செய்தபோது கணக்கில் வராத ரூ.4.41 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து சார் பதிவாளர் மூர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



