Monday, June 8, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

admin by admin
01/02/2026
in செய்திகள், தமிழ்நாடு, மாவட்டங்கள்
0
காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம், இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கணவர் கலைராஜனும் தனதுகம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த தாயார் கலைராஜனின் தமிழ்ச்செல்வி, துணிகளை துவைப்பதற்காக வீட்டின் பின்புறத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அரை மணி நேரம் கழித்து வந்து பாரத்த போது, தாழிடப்பட்டிருந்த வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து, வீட்டுக்குள் வந்து பார்த்த போது, பீரோவுக்குள் இருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த தலைமைக் காவலர் அபர்ணா, உடனடியாக தனது வீட்டுக்கு விரைந்து வந்து சோதனையிட்டார். அப்போது பீரோவுக்குள் இருந்த 40 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, பெண் ஒருவர் குழந்தையுடன் வீட்டுக்குள் நுழைவதும். பின்னர் பையோடு அவர் திரும்பிச் செல்வதும் பதிவாகி இருந்தது.

AlsoRead

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

இதனைத் தொடர்ந்து, இந்த சிசிடிவி காட்சிகளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் புதுக்கோட்டை நகர காவல்நிலைய போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான பெண். காட்பாடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதாக ரயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், காட்பாடி ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த பெண் உட்பட 2 பேரை பிடித்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பதும், இந்த திருட்டுச் செயலில் ஈடுபட்டது அவர்கள் தான் என்பதும் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், பவுடர் டப்பாவுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40 பவுன் நகை மற்றும் சில வெள்ளிப் பொருட்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, காட்பாடி ரயில்வே போலீசார் அவர்களை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கீரன் (35), அவருடைய மனைவி பிகாஸ் (40) எனத் தெரிய வந்தது. அவர்களையும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட நகைகளையும் புதுக்கோட்டை நகர போலீசாரிடம் காட்பாடி போலீசார் ஒப்படைத்தனர். அவர்களின் இரண்டு குழந்தைகள் பெற்றோரைப் பிரிந்த நிலைமை கருதி இருவரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Tags: ஒடிசா தம்பதி கைதுகாட்பாடிநகை திருட்டுவேலூர் மாவட்டம்
Previous Post

மாலை 6 மணிக்கு மேல் பத்திரப்பதிவு ஏன்? சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

Next Post

வடலூர் தைப்பூச ஜோதி கொடியேற்றம்

Related Posts

annamalai

“பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

05/06/2026
Annamalai

“அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு

05/06/2026

கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!

04/06/2026

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?

04/06/2026

ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

04/06/2026

“மீண்டும் வெற்றிச் சரித்திரம் எழுதுவோம்! உதயசூரியன் ஒளியால் இருள் விலகும்” – கலைஞர் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

03/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “பாஜகவிலிருந்து விலக இதுதான் காரணம்” – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!
  • “அண்ணாமலை விலகியதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – நயினார் நாகேந்திரன் பேச்சு
  • கேரளாவின் கடன் ரூ.5.07 லட்சம் கோடி: பினராயி விஜயன் – வி.டி. சதீசன் இடையே அரசியல் மோதல்!
  • டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து: வெளிநாட்டினர் உட்பட 21 பேர் பரிதாப பலி – விதிமீறல்களே காரணமா?
  • ஆரணி தாலுகா அலுவலகத்தில் முடங்கிய பணிகள்: சான்றிதழ்கள் கிடைக்காமல் பொதுமக்கள், விவசாயிகள் கடும் அவதி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved