பெங்களூரை சேர்ந்த குடும்பத்தினர் 6 பேர் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில்உள்ளதங்கள் உறவினர் வீட்டுதுக்க நிகழ்வில் கலந்துகொண்டு நேற்றுகாலை சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் தெள்ளூர் கூட்டுச்சாலையில் பயணிகளை ஏற்ற நின்ற அரசு பேருந்து மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரின் முன்பக்கம் முழுவதும் சேதம் அடைந்தது.
இதில் காரில் இருந்த ஷெரின் தாஜ் (28) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த விரிஞ்சிபுரம் காவல் துறையினரும் வேலூர் தீயணைப்புத்துறையினரும் உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
காரில் படுகாயம் அடைந்த நிலையில் முகமது அசார் (38), ஸ்நேத (27) மற்றும் மூன்று சிறுவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இவ்விபத்தால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இவ்விபத்து குறித்து விரி்ஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



