கடலூர் மாநகராட்சி அரங்கில்”என் ஊர் என் கனவு” என்ற கருத்தரங்கு நடந்தது.
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். இராதாகிருஷ்ணன்,மாநகராட்சி மேயர் திருமதி சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகள் மற்றும் தேவைகளை அறிந்து, அதற்கேற்ப அரசின் திட்டங்களை வடிவமைக்கும் நோக்கிலும், தமழ்நாடெங்கிலும் உள்ள குடும்பங்களின் கனவுகளை 2030ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்ற உதவும் வகையிலும் “உங்க கனவ சொல்லுங்க’ என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ் தனிமனிதர்களின் முன்னேற்றம்மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் வகையில் கடலூர் மாவட்டத்தில் 1,90,000 குடும்ப அட்டைதாரர்களின் கனவுகளை நேரடியாக கேட்டறிவதற்கு 50,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வமாக பொதுமக்களின் கனவுகள் பெறப்பட்டு வருகின்றன.
அவர்கள் மாவட்டங்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், பல்வேறு கனவுகளை நிறைவேற்றுவதற்காகவும், அதனை பல்வேறு திட்டங்களாக தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்துவதற்காகவும், தற்போதுள்ள திட்டங்களை மேம்படுத்துவதற்காகவும் மாவட்ட அளவில் பல்வேறு துறைகளில் சிறந்து ஒருங்கிணைத்து ஆலோசித்து விளங்கும் சாதனையாளர்களை தொலைநோக்குப் பார்வை 2030 செயல்திட்டம் மற்றும் யுத்தியை தயார் செய்திடும் வகையில் வேறு எந்த மாநிலத்திலும் செல்படுத்தாத புதிய முன்னெடுப்பான “என் ஊர் என் கனவு” என்ற சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இத்திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு துறை அலுவலர்கள்,தனியார் நிறுவன நிபுணர்கள், அரசு சாரா அமைப்பு வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தனிநபர்களை உள்ளடக்கி தொலைநோக்குப் பார்வை திட்ட முன்வரைவு தயார் செய்யப்படவுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறைக்கு பொறியாளர் சக்திவேல், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைக்கு மருத்துவர் நடனசபாபதி ஸ்ரீமதி இராஜேந்திரன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு கலைச்செல்வி, கூட்டுறவுத்துறைக்கு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் இராமு, சுற்றுலாத்துறைக்கு யாத்ரா டிராவல்ஸ் மேலாண்மை இயக்குநர் எஸ்.பி.ராசன், நீர்வள ஆதாரத்துறைக்கு சிதம்பரநாதன், உணவகங்கள் சார்ந்தவற்றுக்கு கடலூர் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சிவராமகிருஷ்ணன், சுகாதாரத்துறைக்கு மருத்துவர்கள் தமிழருவி, பாலகுமரன், கல்வித்துறைக்கு முதுநிலைப் பேராசிரியர் இராஜேஷ்குமார். நெடுஞ்சாலைத் துறைக்கு மண்டல உதவிப் பொறியாளர் கந்தசாமி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு சௌரிராஜன், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறைக்கு உதயகுமார். இந்திராராணி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்கு கொளஞ்சியப்பர் கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சுரேஷ்குமார், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு திட்ட அலுவலர் வைத்தியநாதன் ஆகியோர் சிறப்பு வல்லுநர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடலூர் மாவட்டத்திற்கான புதிய முன்னெடுப்பு திட்டங்கள் உருவாக்கப்படவுள்ளன.
அதன் மூலம் வேலைவாய்ப்பினை கடலூர் மாவட்டத்தில் இதுவரை போக்குவரத்து, மேம்பாலம், சாலை வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அடுத்தகட்ட நகர்வுக்காக தொழில்துறையில் சிறந்து விளங்கிடும் வகையில் டைடல் பூங்கா, தோலில்லா காலணி தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை உருவாக்கி ஏற்படுத்தி பொதுமக்களின் பொருளாதார முன்னேற்றத்தினை உறுதிசெய்திடும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இவ்வாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணைமேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ரா.அ.பிரியங்கா, மாவட்ட வன அலுவலர் குருசாமி. வேளாண்மை இணை இயக்குநர் எம்.லட்சுமிகாந்தன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ.இளஞ்செல்வி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் ஜெய்சங்கர், மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான் மற்றும்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



