கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் சாங்கியம். பிள்ளையார்பாளையத்தில் தென்பென்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 25,20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைமாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில், கள்ளக்குறிச்சிதெற்குமாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ முன்னிலையில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் பேசிய தாவது:-
இந்த ஊராட்சிக்கு மட்டும் ரூ. 50கோடி, பணிகள் நடைபெற்றுள்ளன. மேலும் ஜம்பைாஸ்வரர் திருக்கோயில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோயில், ராவுத்தநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட பல திருக்கோயில்கள் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. வாணாபுரம் தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. ரிஷிவந்தியம் தனி ஒன்றியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை, திராவிட மாடல் அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பின்பு அவரிடம், “தேமுதிக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் நீங்கள்தான் பாலமாக இருக்கிறீர்கள் என சொல்லப்படுகிறது. திமுக கூட்டணியில் தேமுதிக கூட்டணி இணைய வாய்ப்பு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பப் பட்டது.
அதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “பத்திரிகைகள் அதுபோன்று எழுதுகிறார்கள். திமுக- தேமுதிக கூட்டணி குறித்து தலைமை தான் முடிவெடுக்கும்” என்றார். இந்நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தே.மலையரசன், சட்டமன்ற உறுப்பினர் தா. உதயசூரியன், மற்றும் நெடுஞ்சாலை துறை தலைமை பொறியாளர் பா.செந்தில், கண்காணிப்பு பொறியாளர் பி. பரந்தாமன், கோட்டப்பொறியாளர் சே.சேதுபதி, கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் புவனேஸ்வரி பெருமாள். திருக்கோவிலூர்
ஒன்றியக் குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார், உளுந்தூர்பேட்டை ஒன்றியக் குழு தலைவர் ராஜவேலு, வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவர்கள் தனம்சக்திவேல், நெடுஞ்செழியன், சென்னம்மாள் அண்ணாதுரை திருக்கோவிலூர் ஒன்றிய செயலாளர்கள் செட்டிதாங்கல் எஸ்.அய்யனார்.எம்.ஆர்.(எ) எம்.ராஜேந்திரன், பூமாரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.



