தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் நேற்று காலை திருமண விழாவில் பங்கேற்ற பின்னர், எடப்பாடி கே.பழனிசாமி திருச்சிக்கு செல்லும் வழியில் வண்ணாரப்பேட்டைஎன்ற இடத்தில், விவசாயிகளை சந்தித்தார்.
அப்போது காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற உடடியாக தண்ணீர் வேண்டும் என விவசாயிகள் கூறினர். மேலும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவிட்டும், அறுவடை செய்ய இன்னும் சில தினங்கள் தண்ணீர் இருந்தால் மகசூலை எடுத்துவிட முடியும் என விவசாயிகள் எடுத்துரைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தஞ்சாவூர் அருகே காய்ந்து வரும் நெற்பயிரை விவசாயிகள் காட்டினர். கதிர் முற்றி வரும் நிலையில், தண்ணீர் இல்லாமல் காய்ந்து
வருகிறது.
இன்னும் 20 நாட்களுக்கு நாட்களுக்கு தண்ணீர் வேண்டும் என விவசாயிகள் கேட்கின்றனர். எனவே கஷ்டத்தை உணர்ந்து 20 இந்த அரசு விவசாயிகளின் நாட்களுக்கு மேட்டூரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அப்படி திறந்தால் தான் நெல் உற்பத்தியும் அதிகரிக்கும். விவசாயிகளின் குடும்பமும், வாழ்வாதாரமும் நியாயமான கோரிக்கையை இந்த தமிழக அரசு உணர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும். இதை நம்பிதான் விவசாயிகளின் உள்ளது. இவ்வாறு பழனிசாமி கூறினார்.



