வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருக்கு குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுவதாக வாணியம்பாடி ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் நிகில் குமார் குப்தா வாணியம்பாடிரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தண்டவாளங்களுக்கு இடையே நடந்து செல்வதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் இதற்கு உரிய விழிப்புணர்வுகள் பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகிலேயே வாணியம்பாடி நகராட்சியின் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டு தீவைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு தீ வைக்கப்படுவதால் ரயில் தண்டவாளங்களில் இருக்கும் ஓயர் மற்றும் கனெக்சன்கள் பழுதடையக்கூடிய சூழல் உள்ளதாகவும் இதனை விழிப்புணர்வு தடுக்க பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தண்டவாளங்களை கடப்பதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு அபாயம் இருப்பதாகவும் அதனை தவிர்க்க வேண்டும் என ஜோலார்பேட்டைரயில்வே காவல் ஆய்வாளர் நிகில் குமார் குப்தா பொது மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.



