திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையார் சாமி தரிசனம் செய்தனர்.
ராஜ கோபுரம் மற்றும் அம்மனி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டு ஜிக்சாக் வரிசையில் சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் தரிசனம் முடிந்த பிறகு திருமஞ்சன கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்ல கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



